சனி, 31 டிசம்பர், 2011

தலை சார்ந்த நோய்க்கு




தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம் -Shad Bindu thailam

தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம் -Shad Bindu thailam
(ref-பைஷஜ்யரத்னாவளி - சிரோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1. கரிசலாங்கண்ணிச்சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ 3.200 லிட்டர்
2. ஆட்டுப்பால் – அஜக்ஷீர 800 கிராம்
3. நல்லெண்ணெய் – க்ருஷ்ணதிலதைல 800 “

இவைகளை ஒன்று கலந்து அத்துடன்

1. ஆமணக்குவேர் – எரண்டமூல 10 கிராம்
2. தகரம் – தகர 10 “
3. சதகுப்பை – ஸதபுஷ்ப 10 “
4. கீரைப்பாலை – ஜீவந்தி 10 “
5. அரத்தை – ராஸ்னா 10 “
6. இந்துப்பு – ஸைந்தவலவண 10 “
7. கரிசலாங்கண்ணி – ப்ருங்கராஜ 10 “
8. வாயுவிடங்கம் – விடங்க 10 “
9. அதிமதுரம் – யஷ்டீ 10 “
10. சுக்கு – சுந்தீ 10 “

இவைகளையும் நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிக்கட்டி பத்திரப்படுத்தவும்.

அளவு:

6 சொட்டுகள் வரை மூக்கில் சொட்டு மருந்தாக உபயோகிக்கலாம். கபாலக்ரஹ, சிரோப்யங்க, அப்யங்க போன்ற உபயோக முறைகளிலும் பயன் படுத்தலாம்.

தீரும் நோய்கள்:

தலைசார்ந்த நோய்கள் (சிரோ ரோக), பல்லாட்டம் (தந்தசலன), பார்வைமங்கல் (த்ருஷ்டி தௌர்பல்ய), முடியுதிரல் (கேஸஸாத).


தெரிந்து கொள்ள வேண்டியவை

1. துஷ்ட பீனசம் தவிர எல்லா பீனச நோய்களுக்கும் -நசியம் செய்து வர -மண்டை கணம் -பீனச தொந்தரவுகள் மாறும்
2. கரிசாலை இருப்பதால் -முடி வளர வைக்க -நசியம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. கண் பார்வை தெளிவாக்கும்
4. பல் ஆட்டத்தை குறைக்க -இந்த தைலம் கொண்டு நசியம் செய்திடல் வேண்டும்

information source
Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக